கொடநாடு விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார் தினகரன். அமமுகவுடன் இணைவது தொடர்பாக, பாஜக மேலிடம் என்ன சொன்னாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளும் முடிவில் கொங்கு தேசம் இல்லை.
' தினகரனோடு கைகோர்ப்பது என்பது நடக்காத காரியம். சசிகலா தரப்பிடம் அதிகாரம் கிடைத்துவிட்டால், அமைச்சர்கள் கையில் வைத்திருக்கும் அனைத்தையும் சுரண்டிவிடுவார்கள். இத்தனை நாள் அவர்களுக்கு எதிராக நாம் செய்த செயல்களை வைத்தே நம்மை ஓரம்கட்டுவார்கள். அரசியல் எதிர்காலமே இல்லாமல் செய்துவிடுவார்கள்' என அச்சப்படுவதுதான் காரணம்.
ஆனால், கொடநாடு விவாகரத்தை வைத்துக் கொண்டு பாஜகவிடம் டீல் பேசிக் கொண்டிருக்கிறார் தினகரன். இதைப் பற்றி டெல்லி வாலாக்களிடம் பேசிய தினகரன் தரப்பினர், ' கொடநாடு வில்லங்கத்தில் கொஞ்சம்தான் வெளியாகியிருக்கிறது. முழு வீடியோவும் விரைவில் வெளியாகும்.
தேர்தலுக்கு முன் அதிமுக எங்களிடம் வந்துவிட்டாலும், தேர்தலுக்குப் பிறகு உங்களை நாங்கள் ஆதரிப்போம்' எனக் கூறியுள்ளனர். அவரது வார்த்தைகளை டெல்லி வாலாக்கள் நம்பவில்லை. ' உங்களுக்கு எதிராக இவ்வளவும் செய்துவிட்டோம். நீங்கள் எங்களை ஆதரிப்பீர்களா?' என சிரித்தபடியே கேட்டுள்ளனர். எடப்பாடியை வீழ்த்துவதற்காக அடுத்தகட்ட ஆட்டத்துக்குத் தயாராகி வருகிறார் தினகரன்.