சர்வதேச டெஸ்ட் போட்டி மற்றும் ஒரு நாள் போட்டிக்கான அணியின் கேப்டனாக இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி அறிவிக்கப்பட்டுள்ளார்.2018-ம் ஆண்டில் சிறப்பாக விளையாடிய பல்வேறு நாட்டு வீரர்களை தேர்வு செய்து சர்வதேச அணியை ஐ.சி.சி.அறிவித்துள்ளது. இந்திய கேப்டன் விராத் கோஹ்லி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெஸ்ட் அணியில் கோஹ்லியுடன் இந்திய வீரர்கள் ரிஷப் பாண்ட், பும்ரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ஒரு நாள் போட்டிக்கான சர்வதேச அணியில் கோஹ்லியுடன் ரோகித் சர்மா, குல்தீப யாதவ், பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இரு அணியிலும் கோஹ்லியுடன் இந்திய வீரர் பும்ராவுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. 2018 -ல் 13 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்களுடன் 1322 ரன்களையும், 14 ஒரு நாள் போட்டிகளில் 6 சதங்களுடன் 1202 ரன்களைக் குவித்து கோஹ்லி சாதனை படைத்துள்ளார்.