தினகரனோடு உறவாடும் ஜி.கே.வாசன். திமுக பக்கம் காங்கிரஸ் இருப்பதால் அந்த அணிக்குள் செல்வதற்கு தயங்கி வருகிறார் தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.
இந்தக் கூட்டணிக்குள் வாசன் வந்தாலும், அவருக்கு காங்கிரஸ் கட்சியே சீட் ஒதுக்க வேண்டும் என ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால் இது சாத்தியப்படாது என்பதால் தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் ஜி.கே.வாசன்.
மக்கள் நலக் கூட்டணி போல ஆகிவிடக் கூடாது என்பதால் மிகப் பெரிய கூட்டணிக்காகவும் அவர் காத்திருக்கிறார். பாமக, தேமுதிக, தமாகா, அமமுக போன்ற கட்சிகளோடு போட்டியிட்டால் வெற்றி வருமா எனவும் அவர் யோசிக்கிறார். டெல்டா பகுதிகளில் ஓரளவுக்கு செல்வாக்கு இருப்பதால், அமமுகவோடு சேர்ந்தால் ஓரிரு இடங்களில் வெல்லலாம் எனவும் அவர் நம்புகிறார். தினகரன் கூறும் மாநிலக் கட்சி தமாகா தான் என்கிறார்கள் அக்கட்சி நிர்வாகிகள்.
அருள் திலீபன்