ஆளுநர் மாளிகை முன் திமுக சார்பில் நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது.கோடநாடு கொள்ளை, தொடர் கொலைகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது புகார் எழுந்துள்ளது.இது குறித்து நீதி விசாரணை கேட்டு ஆளுநரிடம் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் மனு கொடுத்தார். ஆனால் மனு கொடுத்து பல நாட்களாகியும் ஆளுநர் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து திமுக சார்பில் நாளை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் காங்கிரசும் பங்கேற்கும் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
கொடநாடு விவகாரம் : திமுக நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காங்° ஆதரவு!
Advertisement