முதல்வர் நாற்காலியில் மீண்டும் அமர்ந்துவிட வேண்டும் என்கிற துடிப்பில் சங்கரமடத்தின் உதவியை நாடியிருக்கிறாராம் ஓ. பன்னீர்செல்வம்.
கொடநாடு சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை ஆளுநர் மாளிகை அருகே போராட்டம் நடத்த இருக்கிறார் ஸ்டாலின். மனோஜ், சயான் வாக்குமூலத்தைத் தொடர்ந்து கூடுதல் நெருக்கடியில் இருக்கிறார் முதல் அமைச்சர்.
இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர ஆசைப்படுகிறார் பன்னீர்செல்வம். இதற்காக காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்துப் பேசியிருக்கிறார் பன்னீர்செல்வத்தின் உறவினர் ஒருவர்.
பன்னீர்செல்வத்தின் தூதுவராக நடந்த இந்த சந்திப்பில், ஆர்எஸ்எஸ் மூலமாக நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தினால் மீண்டும் அண்ணனே முதல்வர் சீட்டில் அமர்வார். அவர்கள் விரும்பியதால்தான் எடப்பாடியார் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார். அண்ணன் முதல்வர் ஆகிவிட்டால் நீங்கள் விருப்பப்பட்டதை செய்து கொள்ளலாம். அதிகாரமே உங்கள் பக்கம் இருக்கும். முதல்வராக மூன்று முறை இருந்துவிட்டு துணை முதல்வராக எடப்பாடியிடம் ஒட்டிக் கொண்டிருப்பதில் அண்ணனுக்கு உடன்பாடில்லை. மோடியின் விருப்பப்படியே செயல்படவும் அவர் தயாராக இருக்கிறார்.
ஆர்எஸ்எஸ் மேலிடத்திடம் நீங்கள் பேச வேண்டும் எனக் கூறியிருக்கிறாராம். அதற்கு பீடாதிபதியும் சம்மதம் தெரிவித்துவிட்டதால் டபுள் உற்சாகத்தில் இருக்கிறாராம் ஓபிஎஸ்.
-அருள் திலீபன்