டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடையாது - தேர்தல் ஆணையம் திட்டவட்டம்!

TTVDinakaran does not have cooker logo EC Strictly said

by Nagaraj, Jan 24, 2019, 11:01 AM IST

டிடிவி தினகரனின் கட்சிக்கு குக்கர் சின்னத்தைக் நிரந்தரமாக ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் தனி அணியாகப் பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்சினார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.

குக்கர் சின்னம் ராசியானது என்பதால் அதனையே அமமுகவுக்கு நிரந்தரமாக ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்தார். ஆனால் தேர்தல் ஆணையம் மறுத்ததால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இன்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பதிவு செய்யப்பட்ட கட்சியும் அல்ல.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியும் அல்ல. அதனால் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என்று கூறிவிட்டது.

You'r reading டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடையாது - தேர்தல் ஆணையம் திட்டவட்டம்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை