கரூர் மாவட்டத்தின் திமுக பொறுப்பாளராக தினகரன் அணியில் இருந்து தாவிய வி. செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
தினகரன் அணியில் இணைந்து எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. தினகரன் மீது கடும் அதிருப்தியில் இருந்ததால் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் அக்கட்சியில் அவர் இணைந்தார்.
கரூரில் மிக பிரமாண்டமான இணைப்பு விழா கூட்டத்தையும் நடத்தினார். இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், திமுக நெசவாளர் அணி தலைவராக நியமிக்கப்படுகிறார். கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.