இனிவரும் நாட்கள் நெருக்கடியாகத்தான் இருக்கும்; உங்கள் முதல்வர் பதவிக்கு ஆபத்து என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் எச்சரித்திருக்கிறார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு.
உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு சென்னைக்கு வருகை தந்தார் வெங்கையா நாயுடு. அப்போது விமான நிலையத்தில் எடப்பாடியுடன் தனியே ஆலோசனை நடத்தினார் வெங்கையா நாயுடு.
இச்சந்திப்பின் போது கொடநாடு விவகாரங்கள் குறித்து எடப்பாடியிடம் விளக்கம் கேட்டாராம் வெங்கையா நாயுடு. அதற்கு பதிலளித்த எடப்பாடியார், திமுகவின் தூண்டுதலில் சொல்லப்படும் புகார் இது.. நீதிமன்றத்தில் எதிர்கொள்கிறோம் என கூறியிருக்கிறார்.
லோக்சபா தேர்தல் கூட்டணி நிலவரம் குறித்து பேசுகையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் பாஜகவுடன் கை கோர்ப்பதை விரும்பவில்லை என பழைய பல்லவியை பாடியிருக்கிறார். மேலும் அமமுக இணைப்பு குறித்து பேசுகையில், சசிகலாவை கூட நாங்கள் சேர்ப்போம். தினகரன் நம்பகமான நபர் இல்லை என்றே தேய்ந்து போன ரெக்கார்டாக கூறியிருக்கிறார்.
இதில் வெங்கையா நாயுடு அதிருப்தி அடைந்தாராம். பின்னர் புறப்படும் போது, இனிவரும் நாட்கள் கடினமானதாகவும் நெருக்கடியானதாகவும் இருக்கப் போகிறது..உங்கள் முதல்வர் பதவிக்கு ஆபத்து இதுதான் டெல்லி நிலவரம் என ஒரு எச்சரிக்கையாகவே சொல்லிவிட்டு கிளம்பினாராம் வெங்கையா நாயுடு.
-எழில் பிரதீபன்