முன்னாள் ஜனாதிபதி பிரணாப்புக்கு பாரத ரத்னா விருது - நானாஜி தேஷ்முக், டாக்டர் பூபன் ஹசாரிகாவுக்கும் பாரத ரத்னா!

Bharat Ratna Award for former President pranab mukherjee-Nanaji Deshmukh, Dr Bhuban Hazarika Bharat Ratna!

by Nagaraj, Jan 25, 2019, 20:54 PM IST

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நானாஜி தேஷ்முக், டாக்டர் பூபன் ஹசாரிகாவுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.

மே.வங்கத்தைச் சேர்ந்த பிரணாப் காங்கிரசில் நீண்ட காலம் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். குடியரசுத் தலைவராக இந்தியாவின் உயர் பதவியை அலங்கரித்தவர் பிரணாப் . மராட்டியத்தைச் சேர்ந்த மறைந்த நானாஜி தேஷ்முக் ஜனசங்கத்தின் முக்கியத் தலைவராகவும், எம்.பி.யாகவும் இருந்தவர். 2010 -ம் ஆண்டில் தேஷ்முக் மறைந்து விட்டார். அசாமைச் சேர்ந்த டாக்டர் பூபன் ஹசாரி கா பிரபல அசாமிய பாடகர். இவரும் 2011-ல் இறந்து விட்டார்.

You'r reading முன்னாள் ஜனாதிபதி பிரணாப்புக்கு பாரத ரத்னா விருது - நானாஜி தேஷ்முக், டாக்டர் பூபன் ஹசாரிகாவுக்கும் பாரத ரத்னா! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை