குடிப்பழக்கம், வறுமைக்கு எதிரான போராட்டம் தொடரும் என பத்மஸ்ரீ விருது பெற்ற மதுரை சின்னப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
மகளிர் முன்னேற்றத்திற்காக மகளிர் குழுக்களை அமைத்து நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக காரணகர்த்தாவாக திகழ்ந்தவர் மதுரை சின்னப்பிள்ளை. இதற்காக சக்தி புரஸ்கார் விருது வழங்கிப் பாராட்டிய அப்போதைய பிரதமர் வாஜ்பாய், மதுரை சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து வணங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தது.
மதுரை அருகே பில்லு சேரி கிராமத்தில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வரும் சின்னப்பிள்ளையின் சமூக சேவை இன்னும் தொடர்கிறது .பெண்கள் முன்னேற்றம் மற்றும் குடிப்பழக்கம், வறுமைக்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என்றும் பத்மஸ்ரீ விருது பெற்றது குறித்து சின்னப்பிள்ளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.