மதுரையில் ரூ.1264 கோடி மதிப்பில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுவிழா விமான நிலையம் அருகே மண்டேலா நகரில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர்.
ரூ1264 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!
Advertisement