சென்னை சரவணா ஸ்டோர்ஸின் 74 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, கோவையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் 70க்கும் மேற்பட்ட கிளைகளில் இன்று காலை 7.30 மணி முதல் 120 வருமான வரித்துறை அதிகாரிகள் குழு அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளனர். இச்சோதனையில் 800 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து இச்சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சரவணா ஸ்டோர் நிறுவனரின் மகன் யோகரத்தினம் பொன்னுதுரை வீட்டிலும் இச்சோதனை நடைபெறுகிறது.
கடந்த ஜனவரி 3-ந் தேதியன்று சரவண பவன் ஹோட்டல், கிராண்ட் ஸ்வீட்ஸ் மற்றும் அஞ்சப்பர் ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் சரவணா ஸ்டோர்ஸிலும் வருமான வரி சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.