மாணவர்களின் நலன், மக்கள் நலன் கருதி போராட்டத்தைக் கைவிடும்படி அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோரிக்கைகளுக்காக போராடுபவர்களை அழைத்துப் பேசும் பக்குவம் முதலமைச்சர் பழனிச்சாமியிடம் இல்லை. எஞ்சிய ஆட்சிக் காலத்திலும் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் என்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். போராட்டம் நடத்துபவர்களை அடக்க அராஜகத்தையும், அதிகார ஆணவத்தையுமே நம்புகிறார்கள்.எனவே தேர்தல் முடியும் வரை பொறுமையை கடைப்பிடியுங்கள்.
அடுத்து திமுக ஆட்சி வந்தவுடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும். அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படும்.
மாணவர்களின் படிப்பு, மக்களின் நலன் கருதி போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.