20 ரூபாய் டோக்கன் கொடுத்ததாக சொன்னது தொண்டர்களை உற்சாகப்படுத்தவே என்று சுயேட்சை எம்.எல்.ஏ. தினகரன் கூறியுள்ளார்.
முன்னதாக குறித்து திருச்சி மாவட்டம் முசிறியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராஜசேகரன், "ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுக்கப்பட்டது உண்மைதான்.
தினகரன் வெற்றி பெற முக்கிய நிர்வாகிகள் ஒன்றாக அமர்ந்து பேசி இந்த திட்டத்தை வகுத்தோம். அந்த திட்டம் நன்றாகவே பலனளித்துவிட்டது. 20 ரூபாய் டோக்கன் கொடுத்துத்தான் வெற்றி பெற்றோம்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள டிடிவி தினகரன், “தொண்டர்களை உற்சாகப்படுத்தவே ராஜசேகரன் அவ்வாறு பேசியுள்ளார். ரூ.20 டோக்கன் கொடுத்து தான் வெற்றி பெற்றோம் என கூறியதற்கு என்னிடம் தொலைபேசியில் ராஜசேகரன் மன்னிப்பு கேட்டார்” என தெரிவித்துள்ளார்.