திமுக கூட்டணிக்குள் மதிமுக, விசிக இருப்பதைப் பற்றியெல்லாம் தினகரன் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் தேதி நெருங்கும்போது இவர்கள் எல்லாம் தன்னுடைய தலைமையை ஆதரிப்பார்கள் எனக் கணக்கு போடுகிறார்.
இதற்கான வியூகம் பற்றிப் பேசும் அமமுகவினர், தென்மாவட்டத்தில் செல்வாக்குடன் இருந்தாலும் இந்த அணிக்குள் திருமாவளவன் வர வேண்டும் என தினகரன் ஆசைப்படுகிறார். தன் மேல் உள்ள சாதி முத்திரை மட்டுமல்லாமல், பொதுவான தலைவராகவும் மக்கள் தன்னை நினைப்பார்கள் எனக் கணக்கு போடுகிறார்.
திமுக அணியில் இருந்தாலும் அவருக்குச் சிதம்பரம் தொகுதியை மட்டுமே திமுக ஒதுக்கும். இரண்டு சீட்டுகளைக் கொடுக்க வாய்ப்பில்லை. வைகோவுக்கும் ஒரு சீட் தான் கொடுப்பார்கள். இதனால் கடைசி நேரத்தில் அவர்கள் முறுக்கிக் கொள்வார்கள்.
திருமாவளவனைக் கழட்டிவிடுவதற்கு துரைமுருகனே போதும். தேர்தல் செலவு உட்பட அனைத்தையும் தினகரனே பார்த்துக் கொள்வார் என்பதால் அமமுகவை நோக்கி திருமாவளவன் வருவார் என உறுதியாக எதிர்பார்க்கிறோம் என்கின்றனர்.
-அருள் திலீபன்