பல்வேறு பிரச்சனைகளை ‘நீதிமன்றங்களில் பார்ப்போம்' என கூறும் திமுகவினர் இனி போராடினால் கொன்றுவிடுவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கொலை மிரட்டல் விடுத்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.
கோவையில் நடைபெற்ற ‘திருமுருகப் பெருவிழாவில்’ சீமான் பேசியதாவது:
இந்தியம் என்பது பகையாளி; திராவிடம் என்பது அவன் பங்காளி. ஆரியம், திராவிடம் என்பது வெவ்வேறு அல்ல என பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கூறியிருக்கிறார்.
ஒருநாள் இருவரும் கட்டிப் பிடித்து சங்கமிப்பார்கள் என்றார் முத்துராமலிங்க தேவர். நாங்கள் தமிழர் என்று பேசினால் இனவெறியா? நீங்கள் திராவிடர் ஆரியர் என பேசுவது சிரங்கு சொறியா?
ஓட்டு பிச்சை எடுத்து நாட்டை ஆளனும்னு நிலைமை எனக்கு கிடையாது. கேடுகெட்ட பொருளாதார கொள்கையை இந்த நாடு பின்பற்றி கொண்டிருக்கிறது.
10% உயர் சாதியினருக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஏன் திமுக வாக்களிக்கவில்லை. 10% இடஒதுக்கீட்டு விவகாரத்தில் வாயில் பிளாஸ்திரி ஒட்டி திமுக படுத்து கிடக்கிறது.
இடஒதுக்கீட்டு விவகாரத்தில் நீதிமன்றத்தில் போய் பார்க்கிறோம் என்கிறது திமுக. அப்ப கொடநாடு கொலை வழக்கு விவகாரத்தில் ஆளுநர் மாளிகையை ஏன் முற்றுகையிடுகிறீர்கள்? அதையும் நீதிமன்றத்துக்கு போய் பார்க்க வேண்டியதுதானே..
எல்லாத்துக்கும் நீதிமன்றம் போ... ரோட்டில் இறங்கி போராடாத.. கொன்னுபுடுவோம்...
இவ்வாறு சீமான் பேசினார்.