இரட்டை இலை வழக்கில் விரைவில் தீர்ப்பு? குக்கர் சின்னம் விவகாரத்திலும் முடிவெடுக்கிறது ஆணையம்!

Quick-Judgement-on-twin-leaf

by Nagaraj, Feb 9, 2019, 12:09 PM IST

இரட்டை இலை வழக்கில் விரைவில் தீர்ப்பு? குக்கர் சின்னம் விவகாரத்திலும் முடிவெடுக்கிறது ஆணையம்!

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை விறுவிறுவென நடந்து முடிந்துள்ளதால் தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் குக்கர் சின்னம் விவகாரமும் விரைவில் முடிவுக்கு வருகிறது.

தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்த வழக்கில், 4 வார காலத்திற்குள் இாட்டை இலை வழக்கை முடியுங்கள் என்று உச்ச நீதிமன்றம் 2 நாட்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது.

இதனால் நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விறுவிறுவென இரு தரப்பு வாதங்கள் நடைபெற்றது. அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, தினகரன் தரப்பில் கபில்சிபல் ஆகியோர் வாதிட்ட பின் வழக்கு விசாரணை முடிவடைந்ததாக நீதிபதிகள் அறிவித்தனர்.

வரும் திங்கட்கிழமை இந்த வழக்கு அனைத்து தரப்பும் எழுத்து மூலம் வாக்குவாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அடுத்து தீர்ப்பு தான் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தீர்ப்பும் உச்ச நீதிமன்றம் விதித்த 4 வார காலத்திற்குள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

இரட்டை இலை வழக்கு தீர்ப்பு வெளியானவுடன் தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கும் முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தேர்தல் ஆணையம் உள்ளது. இதனால் குக்கர் சின்னம் ஒதுக்கப்படுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பில் தினகரன் கட்சியினர் உள்ளனர்.

You'r reading இரட்டை இலை வழக்கில் விரைவில் தீர்ப்பு? குக்கர் சின்னம் விவகாரத்திலும் முடிவெடுக்கிறது ஆணையம்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை