பாமக தொகுதிகளில் யார் வேட்பாளர்கள்? வடக்கு மண்டலத்தை குறிவைத்த தினகரன்!!

Dinakaran targets PMK Seats

by Mathivanan, Feb 16, 2019, 18:31 PM IST

அதிமுக, பாஜக கூட்டணி போட்டியிடப் போகும் தொகுதிகளை தினகரன் குறிவைக்க இருக்கிறார். அதிலும், பாஜக, பாமக போட்டியிடப் போகும் தொகுதிகளில் உள்ள சிறுபான்மையினர் வாக்குகளையும் தலித் வாக்குகளையும் அவர் குறிவைக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

பாஜக, பாமக போட்டியிடும் தொகுதிகளுக்கேற்ப அரக்கோணம், ஆரணி ஆகிய தொகுதிகளில் முதலியார், நாயுடு வேட்பாளர்களையும் தருமபுரியில் வேளாள கவுண்டரை வேட்பாளரையும் களமிறக்க இருக்கிறார். இதைப் பற்றி தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய தினகரன், வடமாவட்டங்களில் ராமதாஸோடு சேர்ந்து என்னை எதிர்க்கத் திட்டமிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

ஜெயலலிதா, ராமதாஸோடு கூட்டணி சேரவில்லை. ராமதாஸையும் காடுவெட்டி குருவையும் கைது செய்ததால், தலித் ஓட்டுகள் மொத்தமும் அதிமுக பக்கம் விழுந்தன. திருமாவளவனே இல்லாமல் சிதம்பரத்தில் அதிமுக ஜெயித்தது.

இந்தமுறை தலித் வாக்குகள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போகும். 2009, 2014 தேர்தல்களில் தலித் வாக்குகள் பாமகவுக்கு எதிராகப் போனது. இந்தமுறை பாமகவைக் கூட்டணியில் சேர்த்ததால் தலித் வாக்குகள் எதுவும் எடப்பாடிக்கு வந்து சேரப் போவதில்லை.

அதிமுகவில் உள்ள தலித் மக்களும் நம்மைத்தான் ஆதரிப்பார்கள். அதனால் வடமாவட்டங்களில் நாம் வெற்றி பெறப் போவது உறுதி எனக் கூறியிருக்கிறார்.

 

 

You'r reading பாமக தொகுதிகளில் யார் வேட்பாளர்கள்? வடக்கு மண்டலத்தை குறிவைத்த தினகரன்!! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை