மக்களவைத் தேர்தல் குறித்து தமிழக அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தினார்.
விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்பதற்காக தேர்தல் கமிஷன் சார்பில் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இதில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட அங்கீகரிக்கப்பட்ட 9 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர்.