லோக்சபா தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று அதன் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகளுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுகிறது. கடந்த சில நாட்களாக திமுகவை மிகக் கடுமையாக கமல்ஹாசன் விமர்சித்து வருகிறார்.
இதனிடையே இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும். நாங்கள் மக்களுக்காக பேசுகிறோம் என்பது மக்களுக்குப் புரிகிறது என்றார்.