பாஜக கூட்டணியில் தேமுதிக விரைவில் இணையும்- மோடி கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பு: தமிழிசை நம்பிக்கை

DMDK will join BJP allaince, says Tamilisai

by Mathivanan, Mar 2, 2019, 08:16 AM IST

லோக்சபா தேர்தலுக்கான பாஜக கூட்டணியில் தேமுதிக விரைவில் இணையும் என்று தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதிமுக, திமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இறுதியில் தேமுதிகவின் கோரிக்கைகளை அதிமுக தரப்பு ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிமுக-பாஜக அணியில் தேமுதிக இணையும் என தெரிகிறது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக விரைவில் இணையும்.

வரும் 6-ந் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவராக விஜயகாந்தும் கலந்து கொள்வார் என நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

You'r reading பாஜக கூட்டணியில் தேமுதிக விரைவில் இணையும்- மோடி கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பு: தமிழிசை நம்பிக்கை Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை