"பாதிக்கப்பட்டவரின் விவரங்கள் வெளியிடக்கூடாது"- பெண்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் பெருகி வருகிறது. இச்சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் . இதன் ஒரு பகுதியாக நேற்று பொள்ளாச்சி நகராட்சி அருகில் கல்லூரி மாணவ மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட 4 பேரைத் தவிரச் சம்மந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் , என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மாணவ மாணவியர்.இதனையடுத்து நாளை இப்போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம் போலத் தொடரும் எனவும் கூறினர் .

பொள்ளாச்சி பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டங்களைத் தொடர்ந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் விருந்தினர் மாளிகை அருகே அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாகத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், பாதிக்கப்பட்டவரின் விவரங்கள் வெளியிடக்கூடாது எனவும் கேட்டுக் கொண்டனர்.

முன்னதாக, மெரினா கடற்கரைப் பகுதியில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில், மனிதச் சங்கிலி போராட்டம் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை பகுதிக்கு மாற்றப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகள் பொள்ளாச்சியில் போராட்டம் நடத்திவரும் நிலையில், சென்னையிலும் போராட்டம் நீடித்து வருகிறது.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்