மைத்துனருக்கு எதிராக வேட்பாளரை அறிவிப்பாரா- சீமானின் முடிவு என்ன

lok shaba election whats seeman decision

by Suganya P, Mar 19, 2019, 12:30 PM IST
தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என் கட்சியின் தலைவர் சீமான் அறிவித்துள்ளார்.
 
 
அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, கம்யூனிஸ்ட் உள்ளிட்டவை தங்கள் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலைச் சமீபத்தில் வெளியிட்டன. ஆனால், தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை. 23ம் தேதி பட்டியல் வெளியிடப்படும் என சீமான் தெரிவித்துள்ளார். 
 
இதற்கிடையில், மதுரையில் அமமுக வேட்பாளராக டேவிட் அண்ணாதுரை நிறுத்தப்பட்டுள்ளார். இவர் முன்னால் அமைச்சர் காளிமுத்துவின் மகன் மற்றும் சீமானின் மைத்துனரும் ஆவார். இதனால், அணைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் சீமான், மதுரையில் வேட்பாளரை அறிவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. ஏனெனில், டேவிட் அண்ணாதுரையின் சகோதரியைத் தான் சீமான் திருமணம் செய்திருக்கிறார்.
குடும்பத்தில் ஒற்றுமையாகவும், அரசியலில் எதிரியாகவும் மைத்துனருக்கு எதிராகச் சீமான் திகழ்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

You'r reading மைத்துனருக்கு எதிராக வேட்பாளரை அறிவிப்பாரா- சீமானின் முடிவு என்ன Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை