தொகுதிக்காக கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டாரா சரத்குமார் –`நோ ரியாக்ஷன்

sarathkumar party controversy

by Suganya P, Mar 21, 2019, 02:00 AM IST

சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து நேற்று விலகிய முக்கிய நிர்வாகிகள் சரத்குமார் மீது பகிரங்கமாக பல குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.

கடந்த 2007-ம் ஆண்டில் சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய  அரசியல் கட்சியைத் தொடங்கினார் சரத்குமார். 12 ஆண்டுகளாக உள்ள கட்சியின் நிலை தற்போது தலைகீழாக மாறிவிட்டது. அதிமுக கூட்டணியில், 2011ல் போட்டியிட்டு தென்காசி தொகுதியில் வெற்றிபெற்றார்.

அதிமுக, திமுக என எந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காமல், தனி  போட்டியிடப்போவதாக அறிவித்தார் சரத்குமார். போட்டியிடுவோரிடமிருந்து விருப்ப மனுக்களும் பெறப்பட்டது.

இந்த நிலையில், சமக-வின் முக்கிய நிர்வாகிகளான, கிரிபாபு, தக்காளி முருகேசன், குணசேகரன், கிச்சா ரமேஷ் ஆகியோர் தாங்கள் வகித்துவந்த மாவட்டச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்தனர். 23ம் தேதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இவர்களது விலகல் பின்னடைவாக அமைந்துள்ளது.

அதோடு, கட்சி தொடங்கி 12 ஆண்டுகளான நிலையில், தொகுதிக்காகப் பிறரிடம் கையேந்தும் நிலையில்தான் சமக உள்ளது. நேற்று கட்சி தொடங்கிய கமல்ஹாசன் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவிட்டார் என அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்தனர்.

இவர்களது, குற்றச்சாட்டுகள் தொடர்பான எந்த விளக்கமும் சரத்குமார் வெளியிடவில்லை. எதுவும் பேசாமல் சைலண்டாக இருக்கிறார். அண்மையில் கூட, அதிமுக கூட்டணியில் இணைய சரத்குமார்  தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகின. சரத்தின் மௌனம், தொகுதிக்காகக் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டு உறுதியாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You'r reading தொகுதிக்காக கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டாரா சரத்குமார் –`நோ ரியாக்ஷன் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை