தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடும் போது எழுந்திருக்கும் பழக்கமெல்லாம் எங்க மடத்தின் விதியில் இல்ல என்று கூறுவது, தமிழக மக்களை அவமதிக்கிற செயல் என்று சுயேட்சை எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
கும்பகோணம் பகுதியில் நடைபெற்ற தனது ஆதரவாளர் ஒருவர் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “ஜீயர்களாக இருக்கட்டும், மடாதிபதிகளாக இருக்கட்டும் அவர்களுக்கு என்று ஒரு ஸ்தானம் இருக்கு. சராசரி மனிதர்களில் இருந்து வித்தியாசப்பட்டவர்கள். ஆன்மீகத்தில் இருப்பவர்கள்.
அவர்கள் வந்து சராசரியா, பாமரத்தனமாக பேசுவதும் கருத்துக் கூறுவது அவர்களுக்கும் நல்லத்தல்ல. ஆன்மீகத்தை பின்தொடர்பவர்களுக்கும் நல்லதல்ல. இது போன்ற பேச்சு தேவையில்லாத குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும்.
குறிப்பாக தமிழ் தாய்வாழ்த்து என்பது நாம் எல்லோரும் மதிக்கிற, வணங்குகிற பாடல். அந்த பாடல் பாடும் போது விஜயேந்திரர் எழுந்து நிற்கல, அவர் தியானத்தில் இருந்தார் என்று கூறுவது, ஏற்புடையது அல்ல.
மடாதிபதியாக இருப்பவர், துரவியாக இருப்பவர் தியானத்தில் இருந்திருக்கலாம் என்றுகூட வைத்துக்கொள்வோம், ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடும் போது எழுந்திருக்கும் பழக்கமெல்லாம் எங்க மடத்தின் விதியில் இல்ல என்று கூறுவது, தமிழக மக்களை அவமதிக்கிற செயல்” என்று கூறியுள்ளார்.