அப்பத்தாவின் சுருக்குப் பையையும்..சுரண்டிய மோடி – சீமானின் கலகல டாக்

Advertisement

இந்தியாவில் சுழற்சி முறையில் பிரதமர் தேர்வு செய்யப்பட்ட வேண்டும் என சீமான் அறிவுறுத்தியுள்ளார்.

மக்களவை தேர்தல் களம் களைகட்டியுள்ளது. பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டியும் வருகின்றனர். அனைத்து தொகுதிகளிலும் விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் தேர்தல் பரப்புரைகள் நடந்து வருகிறது.  

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது, பேசிய அவர், ‘ஓட்டுக்குக்கா காசு கொடுக்காமல், உங்கள் பிள்ளைகளைத் தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற்றுக் காட்டுவீர்களா? 

தமிழகத்தின் பெரிய கட்சிகள், நல்லாட்சி வழங்கிய கட்சிகள் ஏன் தேர்தலில்  தனித்துப் போட்டியிடவில்லை? என்ற கேள்வியை எழுப்பினார். பின்னர், ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.15 லட்சம் போடுவேன் என்று சொன்னார் மோடி. ஆனால், அப்பத்தா சுருக்குப் பையில் இருந்த பணத்தையும்கூட மோடி விட்டுவைக்கவில்லை. அதையும் எடுத்துக் கொண்டார். நாட்டின் கஜானாவை காலி செய்யவே மோடியும், ராகுலும் போட்டிப் போடுகிறார்கள். சுழற்சி முறையில் பிரதமர் தேர்வு செய்யப்பட்ட வேண்டும். பொதுமக்களை மட்டும் நம்பி நாம் தமிழர் கட்சி தேர்தலில் இறங்கியுள்ளது’ என சீமான் பேசினார்.

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
/body>