பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலை எடுத்து நடத்த... சூரப்பா கடிதம்

surappa send letter for engg counselling

by Suganya P, Mar 30, 2019, 17:59 PM IST

இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் எடுத்து நடத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு பொறியியல் படிப்பு சேர்க்கை குழுவின் தலைவராக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா செயல்பட்டு வந்தார். இதனிடையே தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கமிட்டியில் ஒரு உறுப்பினராக இதுவரை செயல்பட்டு வந்த உயர் கல்வித்துறை  முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் ஷர்மா தன்னை கமிட்டியின் ஒருங்கிணைப்பாளராக அறிவித்துக்கொண்டார்.  

இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா  ராஜினாமா செய்தார். இதையடுத்து, 2019 – 2020 -ஆம் ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வை  நடத்துவதில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் விலகியது.

தொழில்நுட்ப இயக்குநரகம் மூலம் கலந்தாய்வுக்கான பணிகளை மேற்கொள்ள போதிய அவகாசம் இல்லை என்பதால், இந்த ஒரு வருடம் மட்டும் பழைய விதிகளின்படி அண்ணா பல்கலைக்கழகமே கலந்தாய்வை எடுத்து நடத்த சூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.  கலந்தாய்வு  தொடர்பான அரசாணையை ரத்து செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த ஆண்டு தொழில்நுட்ப இயக்குநகரம் கலந்தாய்வினை நடத்தினால் அதற்கு அண்ணா பல்கலைக்கழகம் எவ்வித ஒத்துழைப்பும் வழங்காது என்றும்  சூரப்பா  திட்டவட்டமாகக்  கூறியுள்ளார்.

You'r reading பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலை எடுத்து நடத்த... சூரப்பா கடிதம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை