மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக களம் காணும் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் அவர்களுக்காக மக்களிடையே வாக்குகளையும் சேகரித்து வருகிறார் கமல்ஹாசன்.
சமீபத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில், தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து பேசிய கமல்ஹாசன், பிரசாரத்தின் போது, “நேர்மை தான் எங்களது சரக்கு அதுவே எங்களது முறுக்கு” என ரைமிங்காக பேசுவதாக நினைத்து பேசினார். இரவு நேரம் என்பதால், கூட்டத்தில் இருந்த குடிமகன்கள், குதூகலமாகி கைத்தட்டல் மற்றும் சிரிப்பொலிகளை பறக்க விட்டனர்.
தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், நாங்கள் ரேஸ் குதிரைகள் அல்ல என்றும் யாரிடமும் விலை போக மாட்டோம் என்றும், எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறவையுங்கள் என்றும் மக்களிடையே கேட்டுக் கொண்டார்.
தினந்தோறும் நடைபெறும் தேர்தல் கூத்துக்களை அந்த அந்தப் பகுதி மக்கள் வேடிக்கையாகவே பார்த்து வருகின்றனர். கட்சி வேட்பாளர்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் உளறல் மொழிகள், மக்கள் கையில் இருக்கும் செல்போன் மூலம் படம் பிடிக்கப்பட்டு, வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.
தங்களை ஆள நினைக்கும் ஆட்சியாளர்களின் அறிவுறுத்திறன் இவ்வளவு தான் என்பதை புரிந்து கொள்ளும் மக்கள், காசுக்காக தங்களின் வாக்குகளை விற்காமல் இருக்க வேண்டும்.