அதிமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்திலை தினகரன் நியமித்துள்ளார்.
அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்த, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவை அந்தப் பொறுப்பில் இருந்து தினகரன் நீக்கியுள்ளார். மகளிர் அணி இணைச்செயலாளர் கீர்த்திகா, அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜவர்மன், இளைஞர் பாசறை துணைத் தலைவர் கே.சி. விஜய், இலக்கிய அணி இணைச் செயலாளர் ராமலிங்கம் உள்ளிட்டோரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார். நடிகர் செந்தில் இதுவரை பேச்சாளராக மட்டுமே இருந்து வந்தார். தேர்தல் சமயங்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அதிமுகவுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பார் நடிகர் செந்தில். முதன்முறையாக கட்சியில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக உள்கட்சி பூசல் முற்றியுள்ள நிலையில், தற்போது அரசுக்கு ஆதரவாக 110 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 21 பேர் தினகரன் பக்கம் சாய்ந்துள்ளனர். பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்.எல்.ஏக்கள் தேவை.