ஹச்.ராஜாவை சீண்டினால்..எடப்பாடி பழனிசாமிக்கு ‘கல்தா’ -கரு.பழனியப்பன்

ஹச்.ராஜாவைக் கண்டித்தால் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் பதவியில் இருந்து இறக்கப்படுவார் எனக் கரு.பழனியப்பன் சாடியுள்ளார்.

அரசியல் கருத்துகளை மட்டும் பேசி வந்த கரு.பழனியப்பன், முதன் முதலாக அரசியல் கூட்டணி கட்சிக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார். மக்களைவைத் தேர்தலையொட்டி திமுக-வுக்கு ஆதரவு தெரிவித்த அவர், அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்கள். 

இந்நிலையில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், ‘பெரியார் சிலையை உடைப்பேன் என பாஜக தேசிய செயலாளர் ஹச்.ராஜா தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிக்கிறார். ஹச்.ராஜாவின் பதிவை அடுத்து பெரியாரைத் தெரிந்தவர்;தெரியாதவர் என அனைவரும் கொந்தளித்து விட்டனர். இதன் பிறகு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறந்த காரியம் ஒன்றை செய்தார். என்னவென்றால், பெரியார் குறித்து அவதூராக கருத்து தெரிவித்தற்காக ஹச்.ராஜாவின் அட்மினை கண்டிக்கிறேன்’ என அறிக்கை கொடுத்தார். ஹச்.ராஜாவையே அவர் கண்டிக்கலாமே...இதில் இருந்தே தெரியவில்லை முதல்வரின் நிலை. ராஜாவை கண்டித்தால் அவர் முதல்வர் பதவியில் இருந்து இறக்கப்படுவார்’ எனப் பேசினார்.

முன்னதாக, தேர்தல் பிரசாரக் களத்தில் இறங்கியுள்ள கரு.பழனியப்பனுக்கு சமூக வலைதளங்களில் எதிர்மறை விமரிசங்கள் வந்த வண்ணமாக உள்ளன. அவரது புகைப்படத்தை வெளியிட்டு மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசங்கள். அண்மையில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ள இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா கரு.பழனியப்பனை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்

Tamil news, Latest Tamil News, Tamil News Online, Tamil Nadu Politics, Crime News, Tamil Cinema, Tamil Movies, Movie review, Sports News