பொன்னமராவதி சம்பவத்தால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க இன்று ஒருநாள் மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி கிராமத்தில் ஒரு சமூகத்தினர் குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு ஆடியோ வெளியானதால் நேற்று பல இடங்களில் இருதரப்பினர் இடையே போராட்டங்கள் வெடித்தன.
கலவரத்தின் போது, பேருந்துகள் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டதால், அந்த பகுதியில் பீதி நிலவியது. மேலும், 75 சதவிகித பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதாக 1000 பேர் மீது பொன்னமராவதி போலீசார் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் பெரிய அளவில் கலவரம் வெடிக்காமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பொன்னமராவதி சம்பவத்தால் எந்தவித அசாம்பாவிதமும் நிகழாமல் இருக்க, இன்று ஒருநாள் மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸமாக் கடைகளை மூட அம்மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.