கோடை வெப்பத்தை சமாளிக்க கொடைக்கானலுக்கு படையெடுக்கும் மக்களின் கண்களை குளிர்விக்கும் கொடைக்கானல் மலர் கண்காட்சி துவங்கியது.
கொடைக்கானலில் உள்ள பிரபல தாவரவியல் பூங்காவான பிரையண்ட் பூங்காவில் இந்த ஆண்டிற்கான மலர் கண்காட்சி துவங்கியுள்ளது. புதுவித வண்ண மலர்களை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் அந்த பூங்காவிற்கு வருகை தர தொடங்கியுள்ளனர்.
பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்ட பல வண்ண ரோஜா வகைகள், ஆர்ணித்தோகேலும் ,வெர்பினா, பிங்க் ஆஸ்டெர்,மேரிகோல்ட், பிளாக்ஸ், டெல்பீனியம் என மலர்களின் கலர்ஃபுல்லான அணிவகுப்பு கொடைக்கானலுக்கு மேலும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கத் துவங்கியுள்ளது. இந்த பூங்காவில் 300 வகைக்கும் மேலான ஒரு கோடி பூக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கொடைக்கானலில் மழைப் பொழிவும் சிறிதளவில் தொடங்கி உள்ளதால், அங்கு சுற்றுலா சென்றுள்ள சுற்றுலா பயணிகளின் கொண்டாட்டம் மேலும் அதிகரித்துள்ளது.