ஜெயலலிதா இறந்தவுடன் நானோ அல்லது சசிகலாவோ முதல்வர் பதவியில் அமர்ந்திருக்க வேண்டுமென்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் அருகே அவினாசியில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ''அந்த சமயத்தில் சசிகலா தடுத்த காரணத்தினால்தான் நான் முதல்வர் பதவியில் அமரவில்லை. கழகப் பொதுச் செயலாளர் ஆனவுடன் அத்தனை அமைச்சர்களும் சசிகலாதான் முதலமைச்சர் ஆக வேண்டுமென்று கட்டாயப்பபடுத்தினர். ஆனால், அந்த சமயத்தில் கூட சசிகலா பன்னீர்செல்வத்தைதான் முதல்வர் ஆக்கினார். சசிகலாவை எதிர்க்க வேண்டுமென்ற ஒரே உள்நோக்கத்துடன்தான் இப்போது ஒ.பி.எஸ் , எடப்பாடி பழனிச்சாமி அணிகள் இணைந்துள்ளன'' எ்னறா்ர.