அயர்லாந்தின் மெக் கிரிகோரை வென்றதன் மூலம் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மேவெதர் தொடர்ந்து 50-வது வெற்றியை பதிவு செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் தொழில்முறை சார்ந்த குத்துச்சண்டைப்போட்டியில் 40 வயது மேவெதர் அயர்லாந்தின் மெக் கிரிகோருடன், மோதினார். முதலில் தடுப்பாட்டத்தை ஆடிய மேவெதர் பின்னர் தாக்குதல் ஆட்டத்தை கைகொள்ள, மெக் கிரிகோர் 10 வது சுற்றில் வீழ்ந்தார்.
இதுவரை 50 போட்டிகளில் மோதியுள்ள மேவெதர் ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவவில்லை. சுமார் 4 ஆயிரம் கோடி இந்த போட்டியின் வாயிலாக வருவாய் கிடைத்தது. மேவெதருக்கு 600 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.