அரசியல் கட்சிகளில் உள்ளவர்கள் தங்கள் வாகனங்களில் கட்சிக்கொடியைக் கட்டிக்கொள்ள அனுமதியில்லை என்றும், தலைவர்களின் படங்களை வாகனங்கள் வைத்துக் கொள்ளவும் அனுமதியில்லை என போக்குவரத்துத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியினர் தங்கள் கட்சியின் கொடிகளை வாகனங்களில் பறக்க விட்டு பந்தாவாக வலம் வருவது குறித்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இன்று நடந்த வழக்கு விசாரணையின் போது தமிழக போக்குவரத்துத் துறை தரப்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், தங்கள் பதவிகளை வாகனங்களில் வாகனங்களில் கட்சிக் கொடி கட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி அனுமதியில்லை தெரிவித்துள்ளது.
மேலும் தாங்கள் சார்ந்த கட்சிகளின் தலைவர்கள் படங்களை வாகனங்களில் பளிச்சென தெரியும்படி அச்சிடுவதோ, ஒட்டுவதோ கூடாது என்றும், தங்கள் பெயர், பதவிகளை கொட்டை எழுத்துகளில் வாகனங்களில் பொருத்தவும் போக்குவரத்து சட்டத்தில் இடமில்லை எனவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.