கிழட்டுச் சிறுத்தை என சீறிய எஸ்ரா சற்குணம்..! சிங்கமென குதறி திசை திருப்ப பார்க்கும் ராமதாஸ்..!

Conflict between pmk leader Ramadoss and Esra Sargunam on Pon parappi atrocities

by Nagaraj, Apr 29, 2019, 09:41 AM IST

பொன்பரப்பி வன்முறை சம்பவத்தால் அந்தப் பகுதியே கலவர பூமியாக மாறியது. மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இந்தச் சம்பவத்தில் லேட்டாகத் தான் தமிழக அரசு விழித்தெழுந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரப் பார்த்தது.

இதனால் பொன்பரப்பி சம்பவத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பலரும், பொன்பரப்பி வன்முறைக்கு காரணமே பாட்டாளி மக்கள் கட்சி தான் என்று குற்றம் சாட்டி அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸையும் கடுமையாக விமர்சித்து பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பேராயர் எஸ்ரா சற்குணம், பாட்டாளி மக்கள் கட்சியை கடுமையாக விமர்சித்தார். ஒரு கட்டத்தில் ஆவேசமான எஸ்ரா சற்குணம், நானும் ஒரு விடுதலைச் சிறுத்தை தான்... இந்த கிழட்டுச் சிறுத்தை சீற ஆரம்பித்தால் நாடு தாங்காது என்ற ரீதியில் பேசினார்.

பேராயர் எஸ்ரா சற்குணம், கிழட்டுச் சிறுத்தை என சீறிய 3 நாட்களுக்குப் பிறகு, அவருக்குப் பதிலடி கொடுப்பதாக எண்ணி, எஸ்ரா சற்குணத்தை சகட்டுமேனிக்கு விளாசித் தள்ளி, பிரச்னையை திசை திருப்புவது போல் தமது ஆத்திரத்தை வெளிப் படுத்தியுள்ளார் டாக்டர் . ராமதாஸ் . பேராயர் எஸ்ராவை கேவலமான ஜந்து, அற்ப சற்குணம் என்றெல்லாம் தரக்குறைவாக விமர்சித்த ராமதாஸ், வன்னியர்களை இழிவுபடுத்துவதா ? மன்னிப்பு கோரவேண்டும் என்றெல்லாம் கூறி மிக நீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டு அதில் எஸ்ரா சற்குணத்தை குதறித்தள்ளியுள்ளார்.

அது மட்டுமின்றி கிழட்டு சிறுத்தையாக இருந்து கொண்டு எஸ்ரா சற்குணம் சீறுவதில் எங்களுக்கு சிக்கல் இல்லை. ஆனால் சீற வேண்டிய இடத்தில் தான் சீற வேண்டும். அதை விடுத்து இளஞ் சிங்கக் கூட்டத்திடம் கிழட்டு சிறுத்தை சீறினால் சிங்கக் கூட்டம் மறக்க முடியாத பாடத்தை புகட்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று மிரட்டல் தொனியிலும் எச்சரித்துள்ளார்.இது மட்டுமின்றி ஈழத் தமிழர் பிரச்னை, கிறிஸ்தவ அமைப்பில் தில்லு முல்லு என்று எங்கெங்கோ, எப்போதோ நடந்த சம்பவங்களையெல்லாம் விலாவாரியாக புட்டுப் புட்டு வைத்து பேராயர் எஸ்ராவை குதறி தமது பழியை தீர்த்துக் கொண்டுள்ளார் டாக்டர் ராமதாஸ் .

கடைசியில் வன்னியர்களை இழிவுபடுத்தி பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் எஸ்ரா வைக் கண்டித்து மிகப்பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார் ராமதாஸ் .

எஸ்ராவுக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் கூறிய வார்த்தைகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார்.கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்ரா சற்குணம் பேசியது முழுக்க முழுக்க ராமதாசின் வன்முறை அரசியலைப் பற்றித் தானே ஒழிய, குறிப்பிட்ட சமூகத்தை எந்த இடத்திலும் அவமதித்து பேசவில்லை.

ஆனால் ராமதாஸோ குறிப்பிட்ட சமுதாயத்தை பேராயர் அவமதித்துவிட்டார் என்று திசை திருப்புகிறார். ராமதாசின் உள்நோக்கம் சாதி, மத ரீதியாக வன்முறையை கட்டவிழ்த்து விடுவது தான். ராமதாசின் அறிக்கையே மிரட்டும் தொனியில் உள்ளது. மதமாற்றம் குறித்து அவதூறு பரப்பி பேராயரை இந்துத்துவக் கும்பலிடம் காட்டிக் கொடுக்க ராமதாஸ் திட்டமிடுகிறாரோ? என எண்ணத்தோன்றுகிறது.

இதனால் அனைத்து சமுதாய மக்களும் ராமதாசிடம் எச்சரிக்கையாக இருப்போம் என்று வன்னி அரசு பதிலடி கொடுக்க பேராயர் எஸ்ரா சற்குணம் மற்றும் டாக்டர் ராமதாஸ் இடையிலான மோதல் வலுக்கும் என்றே தெரிகிறது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.2 சதவீதம் தேர்ச்சி! –முதல் இடத்தில் திருப்பூர் மாவட்டம்

You'r reading கிழட்டுச் சிறுத்தை என சீறிய எஸ்ரா சற்குணம்..! சிங்கமென குதறி திசை திருப்ப பார்க்கும் ராமதாஸ்..! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை