4 தொகுதி இடைத்தேர்தல் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் இன்று முதல் பிரச்சாரம்

4 தொகுதி இடைத்தேர்தல்; மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் இன்று பிரச்சாரம்

இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் களை கட்டத் தொடங்கி விட்டது.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்குகின்றனர்.

மே 19-ந் தேதி நடைபெற உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும், ஒட்டப்பிடாரம் தொகுதியில் பிரச்சாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலையே அத்தொகுதியில் திண்ணைப் பிரச்சாரத்தில் இறங்கி விட்டார்.ஒட்டப்பிடாரத்தில் கனிமொழி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் நடந்து சென்றபடி திமுக வேட்பாளர் சின்னையாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த ஸ்டாலின், ஆங்காங்கே திண்ணைப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

இன்றும் நாளையும், ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிராமம் , கிராமமாக சென்று மு.க.ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிக்க உள்ளார். இரண்டாம் கட்டமாக இத் தொகுதியில் மே 14-ந் தேதி மு.க.ஸ்டாலின் மீண்டும் இங்கு பிரச்சாரம் செய்யுவுள்ளார்.

மே 3 , 4-ந் தேதி மற்றும் மே 15-ந் தேதி திருப்பரங்குன்றம் தொகுதியிலும்,மே 5, 6 மற்றும் 16-ந் தேதிகளில் சூலூர் தொகுதியிலும்,

மே 7, 8 மற்றும் 17-ந் தேதிகளில் அரவக்குறிச்சி தொகுதியிலும் இரு கட்டங்களாக மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இதே போல் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்கிறார்.

இதே போல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். திருப்பரங்குன்றம் தொகுதியில் அமமுக வேட்பாளருக்கு இன்று ஆதரவு திரட்டும் டிடிவி தினகரன், தொடர்ந்து 16 நாட்களுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் இரு கட்டங்களாக தலா 4 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார் டிடிவி தினகரன்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் வரும் 3-ந்தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்கும் நிலையில் 4 தொகுதி இடைத்தேர்தல் களம் களை கட்டுகிறது.

ஸ்டாலின் vs சபாநாயகர்! சபாஷ், சரியான போட்டி...

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
dmdk-urged-the-tamilnadu-government-to-conduct-local-body-elections-immediately
உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்.. தேமுதிக வலியுறுத்தல்
dmk-organising-dharna-against-hindi-imposition-in-district-headquarters-on-20th-sep
இ்ந்தி திணிப்பை கண்டித்து செப்.20ல் திமுக ஆர்ப்பாட்டம்..
kashmir-has-been-made-as-a-prison-vaiko-said
பரூக் அப்துல்லாவை நேரில் சந்திப்பேன்.. வைகோ பேட்டி
now-tamilnadu-has-surplus-electricity-edappadi-palanichamy
மின்மிகை மாநிலமானது தமிழகம்.. எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்
mkstalin-slams-amithshaw-for-his-push-for-hindi-language
இன்னொரு மொழிப்போருக்கு திமுக தயார்.. அமித்ஷாவுக்கு ஸ்டாலின் பதில்
actor-vivek-condemned-the-banner-poster-culture
சினிமா பேனர்களுக்கும் கட்டுப்பாடு வேண்டும்.. விவேக் கருத்து
tamilnadu-political-leaders-issued-statements-against-banners-and-cutouts
பேனர், கட் அவுட் வேண்டாம்.. அரசியல் கட்சிகள் அலறல்
madras-high-court-orders-action-against-officials-after-woman-dies-due-to-illegal-banner
பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு.. அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு, கண்டனம்..
the-main-reason-for-banner-accidents-is-the-lethargic-act-of-authorities-high-court
பேனர் விபத்துகளுக்கு யார் காரணம்? ஐகோர்ட் நீதிபதிகள் கண்டனம்..
madurai-highcourt-bench-restrained-ops-brother-o-raja-and-17-members-to-function-in-theni-dist-milk-co-operative-society-council
பால் கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஓ.பி.எஸ். சகோதரருக்கு தடை.. மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
Tag Clouds