மதிய உணவுத் திட்டத்தின் கீழ், பள்ளிகளில் மசூர் பருப்பு பயன்படுத்தப்பட்டுவந்தது. இந்தப் பருப்பைச் சாப்பிட்ட குழந்தைகளுக்கு நரம்புக்கோளாறுகள் ஏற்பட்டதாகவும், கை, கால்கள் செயலிழப்பு ஏற்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதனால், தமிழ்நாட்டில் மசூர் பருப்புக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், 2017-ஆம் ஆண்டு மசூர் பருப்பு கொள்முதலுக்கான டெண்டரை உணவுத்துறை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, ரேஷன் கடைகளில் மசூர் பருப்பு விநியோகிக்கப்பட்டது. இந்த பருப்பில் அடர் சிவப்பு நிறத்தில் சேர்க்கப்படும் நிறமி நச்சுத்தன்மை வாய்ந்தததாக இருப்பதாக புகார்கள் எழுந்தன.
எனவே, மசூர் பருப்பு விநியோகத்தை நிறுத்த தமிழக உணவுத்துறை முடிவு செய்துள்ளது. ரேஷன் கடைகளில் மசூர் பருப்பு விநியோகத்தை நிறுத்திவிட்டு துவரம் பருப்பை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.