மக்கள் வாக்கு அளித்தது அதிமுக ஆட்சிக்கு எதிராகத்தான்! கொ.ம.தே.க. ஈஸ்வரன் பேட்டி!!

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராகத்தான் மக்கள் வாக்களித்துள்ளனர் என்று கொங்கு மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. கட்சி சார்பில் சின்ராஜ், நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருடன், கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரன், அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். பின்னர், நிருபர்களிடம் ஈஸ்வரன் கூறியதாவது:

தி.மு.க. கூட்டணியில் நாமக்கல் வெற்றி பெற்ற வேட்பாளருடன் சென்று ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றோம். தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது ஸ்டாலின்தான். அவருக்கு நன்றி தெரிவித்தோம். தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்திருக்கிறார்கள். மக்கள் அளித்துள்ள வாக்குகள், அ.தி.மு.க. அரசுக்கு எதிரான வாக்குகள்தான். அ.தி.மு.க. அரசு மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியைத்தான் இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
இவ்வாறு ஈஸ்வரன் தெரிவித்தார்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்

Karnataka-heavy-rain-in-last-24-hours
கர்நாடகாவில் வெளுத்து வாங்கும் மழை..! வெள்ளக்காடான சாலைகள்
Drunken-persons-attack-on-chennai-police
மதுபோதையில் போலீஸ் மீது கைவைக்கும் சம்பவம் அதிகரிப்பு..! அதிர்ச்சியில் சென்னை போலீஸ்
Deepavali-Train-ticket-Reservation-start
தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடும் வகையில், ரயில் முன்பதிவு தொடங்கியது
Iam-not-opposes-drinking-water-supply-jolarpet-Chennai-Durai-Murugan-explains
60 வருஷமா சென்னையில குடியிருக்கேன்..! நான் அப்படிச் சொல்வேனா?- துரைமுருகன் பல்டி
madras-union-of-journalists-condemned-Dr.Ramadoss-for-his-threataning-speech-against-media
ராமதாஸின் அநாகரீகப் பேச்சு; பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்
Ramadoss-broke-against-media-in-a-seminar-held-in-chennai
தேர்தல் தோல்வி எதிரொலி? ஊடகங்கள் மீது ராமதாஸ் எரிச்சல்
Water-crisis-Dmk-protest-in-many-places-in-Tamilnadu
குடிக்க தண்ணீர் எங்கே..? காலிக்குடங்களுடன் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
1459-murders-in-last-ten-years-for-illegal-contact
கள்ளக்காதலால் கடந்த 10 ஆண்டுகளில் 1,459 கொலைகள்..! உயர்நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்
Man-arrested-for-cheating-womens
ரோமியோவாக உலா வந்த திருமண மோசடி மன்னன் கைது
HC-Madurai-branch-refuses-to-extend-the-stay-from-police-arrest-for-director-paRanjith
இயக்குநர் பா.ரஞ்சித் கைதாவாரா? தடையை நீடிக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு

Tag Clouds