ஒரு தொகுதியில் தோற்றாலும் அரசியலை விட்டு விலகுவோம் - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. அதிரடி

இடைத் தேர்தல்களில் 18 பேரும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். நாங்கள் ஒரு தொகுதியில் தோற்றால்கூட அனைவரும் அரசியலை விட்டே விலகி விடுவோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

Feb 9, 2018, 10:16 AM IST

இடைத் தேர்தல்களில் 18 பேரும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். நாங்கள் ஒரு தொகுதியில் தோற்றால்கூட அனைவரும் அரசியலை விட்டே விலகி விடுவோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

பழனியில் நடைபெற்ற திண்டுக்கல் மேற்கு மாவட்ட டி.டி.வி. தினகரன் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட தங்க தமிழ் செல்வன் பேசுகையில், “தமிழகத்தில் 8 மாவட்ட பொறுப்பாளராக என்னை டி.டி.வி. தினகரன் நியமித்துள்ளார். அதற்காக மாவட்டம் தோறும் நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறேன்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு 15-ந் தேதி வருகிறது. நீக்கம் செய்யப்பட்டது சரியே என்று தீர்ப்பு வருமானால் நாங்கள் மேல் முறையீடு செய்ய மாட்டோம். அதன் பின்னர் வரும் இடைத் தேர்தல்களில் 18 பேரும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். நாங்கள் ஒரு தொகுதியில் தோற்றால்கூட அனைவரும் அரசியலை விட்டே விலகி விடுவோம்.

டி.டி.வி தினகரன் முதல்வராக விரும்பவில்லை என அவர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஆனால் எங்களை பொறுத்தவரை டி.டி.வி தினகரன் முதல்வராக வேண்டும் என்பதே 18 எம்.எல்.ஏ.க்களின் விருப்பம் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.

More Tamilnadu News