ஆடி அமாவாசை தர்ப்பணம் புண்ணிய தலங்களில் கூட்டம்

hindu devotees takes holy bath on aadi amavasai day

by எஸ். எம். கணபதி, Jul 31, 2019, 13:42 PM IST

ஆடி மாத அமாவாசை தினமான இன்று தமிழகத்தில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, காவிரி சங்கமம் என்று நீர்நிலைகள் உள்ள புண்ணிய தலங்களில் மக்கள் புனித நீராடினர். மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

இந்துக்கள், அமாவாசை தினங்களில் முன்னோர்களை வழிபடுவார்கள். குறிப்பாக, மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்களில் புண்ணிய தலங்கள், கோயில் குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடுவார்கள். பின்னர், தங்களின் முன்னோர்களுக்கு எள், அரிசி, பழம், பூ, காய்கனி படைத்து தர்ப்பணம் செய்து வழிபடுவார்கள்.

ஆடி அமாவாசை நாளான இன்று கன்னியாகுமரி திரிவேணி சங்கமம், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், குற்றால அருவிகள், திருச்சி அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம், காவிரி சங்கமம் மற்றும தமிழ்நாடு முழுவதும் கோயில் குளங்களில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.
வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் ராமேஸ்வரத்திற்கு வந்திருந்தனர்.

அதிகாலையில் அக்னி தீர்த்தக் கடலில் பித்துருக்களுக்கு பிண்டம், எள் வைத்து முன்னோர்களுக்கு பூஜை செய்தனர். இதே போல், கன்னியாகுமரியிலும் வெளிமாநிலத்தவர்கள் வந்திருந்தனர்.

நெல்லை முன்னாள் மேயரை கொலை செய்தது ஏன்?- திமுக பெண் பிரமுகர் மகன் பரபரப்பு வாக்குமூலம்

You'r reading ஆடி அமாவாசை தர்ப்பணம் புண்ணிய தலங்களில் கூட்டம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை