அத்திவரதர் இன்று பச்சை மற்றும் பிங்க் நிற பட்டுடுத்தி காட்சி தருகிறார். தமிழக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் அத்திவரதரை தரிசித்தனர்.
வைணவர்களால் 108 புண்ணிய தேசங்களில் ஒன்றாக கருதப்படும் காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் அத்திவரதர் பெருவிழா நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் குளத்தில் இருந்து வெளியே வந்த அத்திவரதர், இம்மாதம் 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். வெளிமாநிலங்களில் இருந்தும் தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசனம் செய்து விட்டு செல்கி்ன்றனர். தினமும் ஏராளமான வி.ஐ.பி.க்களும் வந்து தரிசிக்கின்றனர்.
இந்நிலையில், அத்திவரதர் தரிசனத்தின் 33ம் நாளான நேற்று பச்சை நிறப் பட்டு உடுத்தி, மல்லிகை, சம்பங்கி, செண்பக மலர் மாலை அலங்காரத்தில் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளித்தார். அத்திவரதர் தரிசனத்தின் 34ம் நாளான இன்று பச்சை மற்றும் பிங்க் கலர் பட்டு உடுத்தி காட்சி தந்தார். மலர் மாலைகளுடன் பட்டு நூல் மாலையும் அணிந்து தரிசனம் அளித்தார்.
இன்று தமிழக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் அத்திவரதரை தரிசித்தனர்.
இன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளதால், வரதராஜ பெருமாள் கோயில் நடை இன்று மதியம் 2 மணிக்கு சாத்தப்பட்டது. இரவு 8 மணிக்கு மீண்டும் திறக்கப்படவுள்ளது.
அத்திவரதர் நாளை முதல் நின்ற கோலத்தில் காட்சி; ஓ.பி.எஸ். தரிசனம் செய்தார்