காதலர் விக்னேஷ் சிவனுடன் அத்திவரதரை தரிசித்த நயன்தாரா

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்று காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசனம் செய்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சியளிக்கும் காஞ்சி அத்தி வரதரை லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர்.கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கி நாளையுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவடைய உள்ளது. இதுவரை கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் அத்தி வரதரை தரிசித்து வரும் நிலையில் அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் சிறப்பு தரிசனம் செய்து வருகின்றனர். இரு நாட்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் நள்ளிரவில் தரிசனம் செய்தார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வருகை தந்து அத்தி வரதரை சிறப்பு தரிசனம் செய்தார். அப்போது இருவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் மாலை மரியாதை செய்து சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. நயன்தாரா அத்தி வரதரை தரிசனம் செய்த படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds