எடப்பாடி உதவி செய்யாவிட்டால் மெர்சல் படம் ரிலீஸ் ஆகியிருக்காது.. விஜய்க்கு அமைச்சர் பதிலடி..

மெர்சல் படத்துக்கு சிக்கல் வந்த போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உதவி செய்திருக்காவிட்டால் மெர்சல் படம் ரிலீஸ் ஆகியிருக்காது என்று விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.

பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசும் போது, மறைமுகமாக அதிமுக அரசை விளாசித் தள்ளினார். எதனை யாரால் முடிக்க முடியும் என்று பார்த்து, யாரை எங்கே வைக்க வேண்டுமோ அவர்களை அங்கே உட்கார வைத்தால் எல்லாம் சரியாக நடக்கும் என்று மறைமுகமாக முதல்வர் இருக்கையில் அமர்வதற்கு எடப்பாடி பழனிச்சாமி தகுதியானவர் அல்ல என்று சுட்டிக்காட்டினார். இதற்கு அதிமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

இந்நிலையில், கோவில்பட்டியில் செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தன் படம் ஓட வேண்டும் என்பதற்காக சில நடிகர்கள் பரபரப்பாக பேசுகின்றனர். விஜய்யும் அப்படித்தான் பேசியிருக்கிறார். அவர் யார் பேச்சைக் கேட்டு அப்படி பேசினார் என்று தெரியவில்லை. 

அதே சமயம், அவரது பல படங்களை திரையிட முடியாமல் தவித்த போது, அவற்றை வெளியிட அதிமுக அரசு உதவி செய்தது. மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்குதான் வைத்துள்ளார்கள். அதனால், விஜய் பேச்சை கேட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

மெர்சல் படத்தை வெளியிட முடியாமல் எங்களிடம் வந்தார். அப்போது நாங்கள் அவரை முதல்வரிடம் அழைத்துச் சென்று பேசியிருக்கா விட்டால், மெர்சல் படம் வெளியே வந்திருக்காது. இப்படி நாங்கள் வித்தியாசமோ, வேறுபாடோ பார்க்கவில்லை.
அரசியல்வாதிகள் எல்லாம் அரைவேக்காடு என்றால் கமலஹாசன் எதற்காக அரசியலுக்கு வந்தார்? அவர் அரசியல்வாதிகளை குறை சொல்வதாக தெரியவில்லை. சட்டம், காவல்துறை, நீதிமன்றம் என்று எல்லாவற்றையும் குறை சொல்கிறார். அவர்தான் அரைவேக்காடு என்பதை ஒப்புக் கொள்கிறார்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

More Tamilnadu News
heavy-rains-continue-in-chennai-kanchi
சென்னையில் கனமழை தொடரும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..
admk-foundation-day-celebrations
அதிமுக தொடக்க விழா.. எடப்பாடி, ஓ.பி.எஸ் பங்கேற்பு..
actor-dhanush-thanked-mkstalin-for-his-wishes-for-asuran-movie
அசுரன் படம் பார்த்து பாராட்டு.. ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி..
mkstalin-conveyed-wishes-actor-dhanush-and-vetrimaran-for-asuran-movie
அசுரன் படம் அல்ல பாடம்.. வெற்றி மாறன், தனுஷுக்கு தொலைபேசியில் ஸ்டாலின் வாழ்த்து
we-will-not-join-with-traitors-in-admk-says-ttv-dinakaran
துரோகம் செய்தவர்களுடன் இணைய வாய்ப்பில்லை.. டி.டி.வி.தினகரன் பேட்டி
seeman-sould-be-arrested-says-minister-rajendra-balaji
சீமான் வெளிநாடுகளுக்கு சென்று பணம் வசூலிப்பது தெரியாதா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
25-kg-jewels-recovered-from-trichy-lalitha-jewelery-robberrors
லலிதா ஜுவல்லரி கொள்ளையரிடம் இது வரை 25 கிலோ நகைகள் மீட்பு.. திருச்சி போலீஸ் கமிஷனர் தகவல்.
mk-stalin-says-admk-government-got-isi-in-corruption
ஊழலில் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கிய ஆட்சி அதிமுக ஆட்சி.. நாங்குநேரியில் ஸ்டாலின் பேச்சு..
admk-ex-councilor-jayagopal-bail-application-adjourned-to-17th-october
பேனர் சரிந்த வழக்கில் அதிமுக பிரமுகர் ஜாமீன் விசாரணை தள்ளி வைப்பு
aruna-jegadeesan-commission-summoned-seeman-for-enquiry
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட விவகாரம்.. சீமானுக்கு சம்மன்..
Advertisement
Most Read News
bodies-smashed-bones-ground-to-powder-xi-warns-anti-beijing-forces
சீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்
actor-vishal-to-tie-the-knot-in-2019-confirms-father-gk-reddy
நீதிமன்ற முடிவுக்கு காத்திருக்கும் விஷால் திருமணம்? புதிய தகவல்..
pm-modi-xi-agree-on-new-trade-mechanism-at-summit-talks-in-mamallapuram
வர்த்தகம், முதலீடு குறித்து விவாதிக்க உயர்மட்டக் குழு.. மோடி-ஜின்பிங் பேச்சில் முடிவு
ramya-krishnan-reunites-with-her-husband-after-fifteen-years
கணவர் இயக்கத்தில் மீண்டும் ரம்யாகிருஷ்ணன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்..
akshara-haasan-celebrates-birthday-with-agni-siragugal-team
ரஷ்யாவில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா
u-s-imposed-sanctions-on-turkey-prepared-to-swiftly-destroy-its-economy
துருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..
how-edappadi-palanisamy-became-chief-minister
சசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா? தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..
an-international-cricket-star-irfan-pathan-joined-vikram-58
விக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..
prabhas-to-make-announcement-about-wedding-on-his-birthday
பிறந்த நாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு மணப்பெண் அனுஷ்காவா?
bigil-update-thalapathy-vijay-starrer-gets-a-ua-certificate
பிகில் படத்துக்கு யூ/ஏ தணிக்கை சான்று.. ரன்னிங் டைம் தெரியுமா?
Tag Clouds