தமிழர்களின் கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும்..

stalin request centre to protect tamil culture

by எஸ். எம். கணபதி, Sep 27, 2019, 14:47 PM IST

மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்..
கீழடி அகழ்வாராய்ச்சி நடந்த இடங்களை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், தமிழர்களின் கலாசாரத்தை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மதுரையை அடுத்துள்ள திருப்புவனம் அருகே கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், தொன்மையான தமிழர் நாகரிகத்தின் தொல்பொருட்கள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து பல கட்டங்களாக நடந்த அகழ்வாராய்ச்சியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பழமையான பொருட்கள் தோண்டி எடுக்கப்பட்டவன.

இதையடுத்து, உலகிலேயே மிகப் பழமையான நாகரீகம் தமிழர் நாகரீகம் என்பதை உலகுக்கு உணர்த்தும் பல்வேறு வியப்புமிக்க தகவல்கள் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கீழடிக்கு வந்தார்.

அங்கு அகழ்வாராய்ச்சி நடந்த இடங்களை பார்வையிட்டார். அதன்பின், அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழர்களின் வரலாற்று பெருமைகளை பறைசாற்றும் விதமாக கீழடி அகழ்வாராய்ச்சி உள்ளது.

தமிழர்களின் கலாசாரத்தை பாதுகாக்க மத்திய அரசு முன் வர வேண்டும். இதற்காக அதிமுக அரசு, மத்திய அரசுக்கு உரிய முறையில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.


You'r reading தமிழர்களின் கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும்.. Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை