நாஞ்சில் சம்பத்தைப் போல் உள்ள ஒருவரின் அந்தரங்க வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் கடந்த 2 நாட்களாக உலா வருகிறது. யாரோ என்னை களங்கப்படுத்த திட்டமிட்டு சதி செய்து இந்த வீடியோவை விட்டிருக்கிறார்கள். என் வாழ்க்கையில் எந்த தவறும் நடந்ததில்லை என்று நாஞ்சில் சம்பத் மறுத்துள்ளார்.
மீடியாக்காரர்கள் என்ன கேள்வி கேட்டாலும் சளைக்காமல் பதில் சொல்லுபவர் நாஞ்சில் சம்பத். அவரைப் போல் காட்சி தரும் ஒருவரின் அந்தரங்க வீடியோ ஒன்று, வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் வைரலாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அதாவது, ஓட்டல் அறை ஒன்றில் படுக்கையில் அமர்ந்திருக்கும் நாஞ்சில் சம்பத் போன்ற தோற்றம் உடைய அந்த நபர், அருகில் அமர்ந்திருக்கும் பெண்ணை தன் பக்கமாக இழுத்து பிடித்து முத்தம் கொடுக்கும் காட்சி, அந்த வீடியோவில் ஓடுகிறது. சில வினாடிகள் ஓடும் அந்த வீடியோ, திடீரென கட் ஆகி விடுகிறது.
இந்த வீடியோவை வைத்து நாஞ்சில் சம்பத்தைப் பற்றிய விமர்சனங்கள் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால், நாஞ்சில் சம்பத் மிகவும் ஆவேசமாக அதை மறுத்துள்ளார். நான் அந்த வீடியோவை பார்க்கவில்லை. அரசியலில் என்னை களங்கப்படுத்த திட்டமிட்டு எனக்கு பிடிக்காதவன் யாரோ தயார் பண்ணி போட்டிருப்பான். அது யாரென்று நான் தேடப் போவதில்லை, எனக்கும் அந்த வீடியோவுக்கும் சம்பந்தம் இல்லை. என் மனசாட்சி தூய்மையாக இருப்பதால் அதைப் பற்றி கவலைப்படப் போவதில்லை
என்னை பற்றி களங்கப்படுத்துவதன் மூலம் அவருக்கு மகிழ்ச்சி கிடைத்தால், கிடைத்து விட்டு போகட்டும். நான் ஒன்றும் நினைக்கவில்லை. என் வாழ்க்கையில் எந்தவிதமான தவறுகளும் நடந்ததில்லை என்று கூறியிருக்கிறார்.
ஏற்கனவே டி.டி.வி.தினகரனுடைய அ.ம.மு.க.வில் இருந்த தங்கத்தமிழ்ச் செல்வன், பெங்களூரு புகழேந்தி போன்றவர்களின் ஆடியோ, வீடியோக்கள் எல்லாம் வெளிவந்தன. அதே போல், முன்பு அந்த கட்சியில் இருந்த நாஞ்சில் சம்பத் வீடியோவும் இப்போது வைரலாகி விட்டது.