பேனர் சரிந்து விழுந்த வழக்கில் அதிமுக பிரமுகர் ஜாமீன் மனு.. விசாரணை அக்.15க்கு தள்ளிவைப்பு

பேனர் சரிந்து விழுந்து கம்ப்யூட்டர் இன்ஜினீயர் சுபஸ்ரீ மரணமடைந்த வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் ஜெயகோபால் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை அக்.15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

0சென்னை பள்ளிக்கரணை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மகன் திருமண விழாவிற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களை வரவேற்பதற்காக ரேடியல் சாலையில் வரிசையாக பேனர்களை வைத்திருந்தனர். சாலையின் நடுவில் வைத்திருந்த பேனர் ஒன்று சரிந்து விழுந்து, அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கம்ப்யூட்டர் இன்ஜினீயர் சுபஸ்ரீ கீழே விழுந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த லாரியில் அவர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரும் ஜாமீன் கேட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடியாயின.

இந்நிலையில், ஜெயகோபால், மேகநாதன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி புகழேந்தி முன்பாக இன்று விசாரணை வந்தது. அப்போது அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆஜராக இருப்பதாகக் கூறி, வாய்தா கேட்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை வரும் 15ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Advertisement
More Tamilnadu News
edappadi-palanisamy-inagurated-new-tenkasi-district
தென்காசி மாவட்டம் இன்று உதயமானது.. முதல்வர் தொடங்கி வைத்தார்
edappadi-palanisamy-criticise-rajini-comment-on-2021-elections
ரஜினி சொன்ன அதிசயம்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..
rajinikanth-says-tamil-nadu-people-will-ensure-huge-miracle-in-2021-elections
2021ம் ஆண்டு தேர்தலில் மிகப் பெரிய அதிசயம்.. ரஜினி ஓங்கிச் சொல்கிறார்
petition-challenging-indirect-elections-for-mayor-filed-in-madurai-highcourt
மேயருக்கு மறைமுக தேர்தல்.. ஐகோர்ட் கிளையில் முறையீடு..
dubai-industrialists-meeting-with-edappadi-palanisamy
தமிழகத்தில் தொழில் தொடங்க துபாய் தொழிலதிபர்கள் வருகை.. முதல்வருடன் சந்திப்பு.
admk-fears-localbody-election-says-m-k-stalin
திமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை
tamilnadu-governor-promulgated-ordinance-to-conduct-indirect-election-for-mayor
மேயர், நகராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்.. தமிழக அரசு அவசரச்சட்டம்..
when-will-kamal-join-hands-with-rajini
அரசியலில் ரஜினியுடன் இணைவது எப்போது? கமல்ஹாசன் பேட்டி
admk-govt-announces-welfare-measures-keeping-localbody-election-in-mind
சொத்துவரி உயர்வு ரத்து.. சர்க்கரை கார்டுக்கு அரிசி.. உள்ளாட்சி தேர்தல் நிச்சயம்..
admk-and-dmk-welcomed-rajini-kamal-alliance
ரஜினி, கமல் இணைந்தால் எந்த கவலையும் இல்லை.. அதிமுக, திமுக பதில்..
Tag Clouds