வரும் 7ம் தேதி துணை முதல்வர் ஓ.பி எஸ் அமெரிக்கா செல்கிறார்.

O Panneerselvam to visit US in November

by Chandru, Nov 1, 2019, 13:09 PM IST

கடந்த ஆகஸ்டு மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, அமீரகம் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று திரும்பினார். இந்த நிலையில், துனை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்கிறார்.

வரும் 7 ஆம் தேதி ஓ பன்னீர் செல்வம் சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறார். அவருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் உடன் செல்கிறார்.

அமெரிக்காவில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்கிறார். சிகாகோவில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஓ பன்னீர் செல்வம் பங்கேற்க திட்டமிட்டிருக்கிறார்.

You'r reading வரும் 7ம் தேதி துணை முதல்வர் ஓ.பி எஸ் அமெரிக்கா செல்கிறார். Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை