வீரமாமுனிவர் பிறந்தநாள்.. அமைச்சர்கள் மரியாதை

by எஸ். எம். கணபதி, Nov 8, 2019, 12:03 PM IST
Share Tweet Whatsapp

வீரமாமுனிவர் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த கான்ஸ்டைன்டன் ஜோசப் பெஸ்கி, தமிழ்நாட்டிற்்கு சமயத் தொண்டு புரிய வந்து, தமிழ் கற்று தமிழறிஞராக திகழ்ந்தவர். வீரமாமுனிவரின் தமிழ் தொண்டை போற்றும் வகையில், அவர் பிறந்த தினமான இன்று(நவம்பர் 8), தமிழ் அகராதியியல் நாளாக கொண்டாடப்படும் என்ற தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், வீரமாமுனிவரின் பிறந்த தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள வீரமாமுனிவரின் சிலைக்கு கீழே அவரது உருவப் படத்திற்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், மாபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதன்பின், அகரமுதலித் திட்ட இயக்குனரகத்தின் சார்பில் எத்திராஜ் மகளிர் கல்லூரிக் கலையரங்கில் தமிழ் அகராதியியல் நாள் துவக்க விழா நடைபெற்றது.


Leave a reply