பொங்கல் பரிசு திட்டம்.. எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்..

by எஸ். எம். கணபதி, Nov 29, 2019, 12:38 PM IST

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு ஆண்டுதோறும் ஏழைகளுக்கு பொங்கல் பரிசு பை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த பரிசு பையில் பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான பொருட்களும், கரும்பு துண்டும் இடம்பெறும்.

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக ரேஷன் கார்டுதாரா்களுக்கு ரூ.1,000 மற்றம் பொங்கல் பரிசு பை வழங்கும் திட்டத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(நவ.29) காலை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பொங்கல் பையில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, 2 அடி கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலா் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.2,363 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் 2 கோடியே 5 லட்சத்து 25,337 அரிசி மற்றும் சா்க்கரை ரேஷன்கார்டுகள் உள்ளன. இதில் அரிசி கார்டு வைத்திருப்பவர்கள் 1.95 கோடி போ். தற்போது சா்க்கரை கார்டுகளையும் அரிசி கார்டுகளாக மாற்றிக் கொள்ள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே, அப்படி மாற்றிக் கொண்டவர்களுக்கும் பொங்கல் பரிசு பை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a reply